சிங்கப்பூரில் இன்று பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில வாரங்களாக Yishun இல் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் அதற்கான பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாக ஏற்பாட்டளர்கள் கூறினர்.
இன்று அதிகாலை 2 மணியிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோயிலிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த பங்குனி உத்திர திருவிழாவில் கிட்டத்தட்ட 7000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
நேற்று செம்பவாங்கிலும்,Yishun – லும் ரத ஊர்வலங்கள் நடைபெற்றது.
இந்த ஊர்வலங்கள் பங்குனி உத்திர கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்றது
ஆலயத்தின் ஊர்வலத்தில் சுமார் 15,000 பக்தர்கள் கலந்து கொள்வர் என்பது வழக்கம்.