மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!!

மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!!

அதானி குழுமத்துடனான வணிக ஒப்பந்தங்களில் இருந்து மேலும் பல நிறுவனங்கள் பின்வாங்கி வருகின்றன.

இந்திய பணக்காரர் கௌதம் அதானி பல மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்கா சமீபத்தில் குற்றம் சாட்டியது.

அதானி கிரீன் எனர்ஜி செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆணையத்தின் சம்மனுக்கு பதிலளிக்க அதானி குழுமத்திற்கு 21 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

திரு.அதானி மற்றும் 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில்,பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான TotalEnergies தனது முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாகக் கூறியது.

TotalEnergies அதானி கிரீன் எனர்ஜியில் 20 சதவீதமும், அதானி டோட்டல் கேஸில் 37 சதவீதமும் வைத்துள்ளது.

அதானி குழுமத்திற்கு கடன் வழங்க சில வங்கிகள் தயக்கம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் குழு, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று வலியுறுத்துகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானி குழுமம், மும்பை மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் உள்ள முக்கிய விமான நிலையங்களையும் நிர்வகிக்கிறது.

இது மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட் போன்ற துறைகளிலும் செயல்படுகிறது.

ஆந்திர பிரதேசம் இந்த குழுவுடன் செய்து கொண்ட மின் விநியோக ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.