UOL குழும நிறுவனத்தின் இரவு விருந்தில் ஏற்பட்ட சர்ச்சை…!!!

UOL குழும நிறுவனத்தின் இரவு விருந்தால் ஏற்பட்ட சர்ச்சை...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் UOL குழுமத்தின் இரவு விருந்தில் கலந்து கொண்ட சிலர் தங்களது முகத்தில் கருப்பு பெயிண்ட் அடித்ததற்காக நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான டிக்டாக் காணொளியில் 8 பேர் தங்களது முகத்தில் கறுப்பு வர்ணம் பூசியுள்ளனர்.

அவர்கள் 80’S பாணியில் ஆடை மற்றும் சுருள் விக்குகள் அணிந்தபடி புகைப்படம் எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக @summer88959 என்ற கணக்கிலிருந்து வெளிவந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள் அவர்களை கடுமையாக சாடியுள்ளனர்.

இதுபோன்று முகத்தில் கருப்பு சாயம் பூசி பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

கருப்பு நிற சாயம் பூசியவர்கள் ஊழியர்களா என்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.

ஆனால் இந்தச் சம்பவத்திற்கு UOL குழுமத்தின் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.