Tamil Sports News Online

சிங்கப்பூரில் யுவன்!

தமிழ் திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்களை அழைத்து வந்து சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சியை நடத்தி வரும் பிரபலமான நிறுவனமான மேஸ்ட்ரோ புரொடக்சன்ஷ் நிறுவனம் (Maestro Productions).

இசையமைப்பாளர் இளையராஜாவின் நிகழ்ச்சி கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி அன்று நடைபெற்றது.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல் நிகழ்ச்சி கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19- ஆம் தேதி நடைபெற்றது.

பின்னணி பாடகர் ஸ்ரீராம் நிகழ்ச்சியும் கடந்த 2022- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5- ஆம் தேதி நடைபெற்றது.

இசையமைப்பாளர் அனிருத்தின் நிகழ்ச்சி இந்தாண்டு மார்ச் மாதம் 3- ஆம் தேதி நடைபெற்றது.

பெரும்பாலும் இந்த நிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

சிங்கப்பூரில் முதன்முறையாக யுவன் சங்கர் ராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக மேஸ்ட்ரோ புரொடக்சன்ஷ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று இந்த நிகழ்ச்சி தொடர்பான முழு விவரங்கள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.