சிங்கப்பூர் : கொட்டி தீர்த்த மழை!! சாலைகளில் திடீர் வெள்ளம்!!
சிங்கப்பூர் : Wan Tho Avenue மற்றும் யீஷின் அவென்யூ 7 ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தேசிய தண்ணீர் அமைப்பான PUB அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இன்று பெய்த கனமழையே அதற்கு காரணம் என்று தெரிவித்தது.
இருசாலைகளிலும் மதியம் சுமார் 3 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டது.
அதன் பின் இரு பகுதிகளிலும் சுமார் 10 நிமிடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியது.
வாகனமோட்டிகளுக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனது அவசர நடவடிக்கை குழுவை அனுப்பி வைத்ததாக அமைப்பு சொன்னது.
தீவின் வட பகுதியில் மதியம் 2.15 மணி முதல் மாலை 4.50 வரை 127.7 மீட்டர் மிக அதிகமான மழைப்பொழிவு என பதிவாகியுள்ளது.
1978 ஆம் ஆண்டிற்கு பிறகு பதிவான தினசரி அதிகபட்ச மழைப்பொழிவின் முதல் 1 சதவீதத்திற்குள் அது இருப்பதாக அமைப்பு சொன்னது.
வடகிழக்கு பருவகாற்று காரணமாக சிங்கப்பூரில் உள்ள பல இடங்களில் பெரும்பாலான தினங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக திடீர் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று அமைப்பு தெரிவித்தது.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg