சிங்கப்பூரில் இரண்டு கேளிக்கை விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதனை மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் நடத்தினர்.
அவர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையில் சிங்கப்பூர் காவல் துறையும், குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
இந்த இரண்டு இரவு கேளிக்கை விடுதிகள் ஜாலான் சுல்தான், ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரங்களில் உள்ளது.
மார்ச் 31-ஆம் தேதி இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதில் போதைப்பொருள் குற்றங்கள், தீத்தடுப்பு விதிமீறல்கள் போன்ற பல்வேறு சட்ட விரோத செயல்கள் கண்டறியப்பட்டது.
சுமார் 240 பேரிடம் இந்த இரண்டு இரவு கேளிக்கை விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
அவர்களின் எச்சில் சோதிக்கப்பட்டது.
சந்தேகத்துக்குரிய போதைப்பொருள் புழக்கத்தை கண்டறிவதற்காக சோதிக்கப்பட்டது.
31 வயதுடையவரை சட்ட விரோத கும்பலை சேர்ந்த நபர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.
43 வயது உடைய சிங்கப்பூரரைப் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்தனர்.