ஐஸ்லாந்து : தொடர்ந்து ஏழாவது முறையாக வெடிக்கும் எரிமலை!!
ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள எரிமலை இந்த ஆண்டு ஏழாவது முறையாக வெடித்துள்ளது.
அங்குள்ள மீனவ கிராமத்தில் பிரபல சுற்றுலா தலமான Blue Lagoon வெப்ப ஆரோக்கிய நீரூற்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கிரின்டவிக் கிராமத்தில் தற்காப்பு சுவர்கள் கிராமத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன.
ஹீட்னுக்ஸ்கிகா எரிமலை நவம்பர் 21 ஆம் தேதி இரவில் வெடித்ததோடு நெருப்பு குழம்பு மற்றும் சாம்பலை வெளியேற்றியது.
பொதுவாகவே அந்த கிராமம் எரிமலை வெடிப்பால் அதிகம் பாதிக்கப்படுகிறது.
ஏறக்குறைய 4000 பேர் அங்கு வசிக்கிறார்கள்.
ஏற்கனவே அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.சிறிய அளவு நிலநடுக்கங்கள் உணரப்பட்டதை அடுத்து வெளியரற்றப்பட்டார்கள்.
வடக்கு அட்லாண்டிக் அருகே அமைந்துள்ள ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்புகள் பொதுவானவை.
இந்த எரிமலை வெடிப்புகள் இதுவரை தலைநகர் ரெய்காவிக்கைப் பாதிக்கவில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow us on : click here