அடுத்த மாதம் தொடங்கும் SG60 கொண்டாட்டங்கள்!!
சிங்கப்பூரின் 60 வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் அடுத்த மாதமான டிசம்பர் மாதம் ஆரம்பிக்கும் என்று கலாசார,சமூக,இளையர்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.புத்தாண்டு வரவேற்கும் வகையில் SG60 கொண்டாட்டங்களும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தே கொண்டாட்டங்களை ரசிக்க முடியும் என்று அமைச்சகம் கூறியது.
பல்வேறு கலை படைப்புகள்,வானவேடிக்கை நிகழ்ச்சிகளை மக்கள் எதிர்பார்க்கலாம்.
மரினா பே,Singapore Sports Hub ,செந்தோசா,ஆர்ச்சர்ட் ரோடு,கிளார்க் கீ உள்ளிட்ட 17 குடியிருப்பு பகுதிகளில் கொண்டாட்டங்கள் இடம்பெறும்.
Follow us on : click here