Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் மகளிர்காக புதிய திட்டம்!

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பராமரிப்பாளர்களுக்கும், குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் உதவும் நோக்கில் ஓர் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை மக்கள் கழகம் தொடங்கி வைத்தது.

அவர்களை நிதி, மின்னிலக்க திறன்களை மேம்படுத்தி கொள்வதற்காக வழியமைத்து கொடுக்கிறது.

மக்கள் கழகம் நிதி கல்வியறிவு கழகத்துடனும், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் SG மின்னிலக்க அலுவலகத்துடனும் இணைந்து அதற்கான முயற்சியின் ஈடுபடுகிறது.

மகளிர் முன்னேற்றத்திற்காக மக்கள் நிதியுதவி, மின்னிலக்கத் திறன் மேம்பாடு போன்றவற்றின் மூலம் பங்காற்றி வருகிறது.

இதுவரை இந்த திட்டத்தில் பராமரிப்பாளர்கள் 155 பேர் பயனடைந்துள்ளனர்.

அடுத்ததாக, அவர்களுக்காக சிறப்பு நிதி திட்டமிடல் வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரை அதன் முன்னோடி திட்டமாக தொடரும்.

தொடக்க கட்டமாக ஒன்பது கிளைகளில் வகுப்புகள் நடத்தப்படும்.

Kolan ayer, Queens town, Telok Blangah உள்ளிட்ட ஒன்பது கிளைகளில் நடத்தப்படும்.