சிங்கப்பூர் : உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக பேருந்துகளில் செல்வோர்களுக்கு புதிய முறை!!
உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக பேருந்துகளில் செல்வோர் இப்போது QR குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
இந்த சோதனை முயற்சி நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் என்று குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
துவாஸில் 23 ஆம் தேதியும் ,உட்லண்ட்ஸில் வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது.
அதனை சிங்கப்பூரர்கள் ,சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் பயன்படுத்தலாம் என்று ஆணையம் கூறியது.
QR குறியீடுகளை குழுக்களாகவே அல்லது தனி நபர்களாகவோ பயன்படுத்தலாம்.
QR குறியீட்டை எவ்வாறு பயன்படுத்துவது குறித்த வழிமுறைகள் ஆணையத்தின் முகநூல் பக்கத்தில் காணலாம்.
QR குறியீட்டைப் பயன்படுத்தும் முறை இரண்டு சுங்கச் சாவடிகளில் சில தடங்களில் சோதிக்கப்படும்.
அந்த தடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்.மேலும் அங்கு அதிகாரிகளும் உதவிக்கு இருப்பர்.
Follow us on : click here