Latest Singapore News

சிங்கப்பூரில் Bird Paradise

மே,8-ஆம் தேதி மண்டாய் வனவிலங்கு பூங்காவில் “Bird Paradise´´ திறக்கப்படவிருக்கிறது. மே 8- ஆம் தேதியிலிருந்து 26-ஆம் தேதி வரை இதனை காண வருபவர்கள் சலுகைக் கட்டணத்தில் பார்க்கலாம்.

மே 8 முதல் 26-ஆம் தேதி வரை சலுகைக் கட்டணம் விவரம் :

3 முதல் 12 வயதுடையவர்களுக்கு $23.

அதற்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கு $38.

மூத்தோர்களுக்கு $20.

இந்த சலுகைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மார்ச் 30-ஆம் தேதி மண்டாய் வனவிலங்கு குழுமம் தெரிவித்தது.

மே 27-ஆம் தேதி முதல்

பெரியவர்களுக்கு $48,

சிறார்களுக்கு $33 ஆகவும் தலா $10 அதிகம் கொடுக்க வேண்டிருக்கும்.

மூத்தோருக்கு $20 அதில் எந்த மாற்றமும் இல்லை.

Bird Paradise – இல் எட்டு பறவைக் காட்சி கூடங்களை நடந்து சென்றவாரே பார்த்து மகிழக்கூடிய அமைப்பில் இருக்கும்.

பூங்காவில் உள்ள “ Sky Theatre´´ இல் புதிதாக இரு பறவைக் காட்சிகள் நடைபெறும்.

Bird Paradise தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். அதிகபட்ச கடைசியாக மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

Bird Paradise யின் அமைப்பானது, பறவைகள் மற்றும் அவற்றின் கதைகளை உள்ளடக்கிய ஒரு கொண்டாட்டமாக இருக்கும்.

இங்கு ஏராளமான ஹார்ன்பில்ஸ் பறவை இனத்தைக் காணலாம்.

கடந்த ஜனவரி மாதம் ஜூரோங் பறவைப் பூங்கா மூடப்பட்டது.

அங்கிருந்த பறவைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டது.ஏறக்குறைய 3500 பறவைகள் மண்டாய்க்கு மாற்றப்பட்டது.

இதனை குழுமத்தின் தலைமை நிர்வாகி மைக் பார்க்லே கூறினார்.

“ இந்த மாபெரும் இடமாற்றம் பறவைகளுக்கும் ஊழியர்களுக்கும் கிடைத்த முதல்முறை அனுபவம் ´´ என்றும் கூறினார்.