சிங்கப்பூரர்களிடம் மனநல பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிப்பு…!!!

சிங்கப்பூரர்களிடம் மனநல பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிப்பு...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளில் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இன்று( நவம்பர் 19) வெளியிட்ட ஆய்வறிக்கையில்,10 இல் 6 சிங்கப்பூரர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்சனைகளை கையாள்வது குறித்து தெரிந்திருப்பதாக தெரிகிறது.

இன்றைய காலகட்டத்தில் மனநல பிரச்சனையை இளைஞர்கள் சாதாரணமாகவே கருதுகின்றனர்.

பொதுவான மனநல பிரச்சனைகளில்
ஞாபக மறதி, மன இறுக்கம்,குழப்பமான சூழ்நிலை போன்றவை இருக்கும்.

மனநல பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு இல்லாத போது அவர்கள் தெளிவான முடிவெடுப்பதில் சிரமம் மற்றும் உதவியை நாடுவதற்கு இடையே உள்ள தயக்கம் போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘மைண்ட் மேட்டர்ஸ்’என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 4195 சிங்கப்பூரர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த ஆய்வானது 2022 செப்டம்பர் முதல் தொடங்கி இந்த ஆண்டு 2024 பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் மனநல பிரச்சனையில் உள்ள ஒரு கற்பனை மனிதரைப் போன்று கதைச் சொல்லி கருத்து கேட்கப்பட்டது.

ஞாபக மறதி,மன இறுக்கம்,குழப்பம், குடிபோதையால் ஏற்படும் மனக்கோளாறு, கட்டுப்படுத்த இயலாத மனக்கோளாறு போன்ற ஐந்து வகையான மனநல பிரச்சனைகள் குறித்து 58.9 சிங்கப்பூரர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

இந்த விழுகாடானது இதற்கு முந்திய ஆய்வு அறிக்கையுடன் ஒப்பிடுகையில் 42.3 விழுக்காடு அதிகம் என கூறப்படுகிறது.

Follow us on : click here ⬇️