சிங்கப்பூர் : அரசாங்கத்தின் முதல் வெளிநாட்டு ஊழியர் விடுதி!! விரைவில்…….

சிங்கப்பூர் : அரசாங்கத்தின் முதல் வெளிநாட்டு ஊழியர் விடுதி!! விரைவில்.......

சிங்கப்பூர் : மனிதவள அமைச்சகத்தின் முதல் வெளிநாட்டு ஊழியர் விடுதி 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய கட்டடம் ஊழியர் விடுதிகளின் தரத்தை மேலும் உயர்த்தும் முயற்சியின் இது ஒரு பகுதி.

மேலும் 6 விடுதிகள் கட்டப்படும். இந்த தகவல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய விடுதி பற்றிய சில தகவல்கள் :

துக்காங் இன்னோவேஷன் லேனில் அமைய உள்ள விடுதியில் 210 அறைகள் உள்ளன.அங்கு 2400 ஊழியர்கள் தங்கலாம்.

ஊழியர்களின் தனிமையைப் பாதுகாக்கவும்,அதே வேளையில் மற்றவர்களுடன் இணைந்து பழகவும், ஓய்வு எடுப்பதற்கு உரிய இடத்தை உருவாக்க விரும்புவதாக அமைச்சகம் கூறியது.

ஒவ்வொரு அறைகளிலும் அதிகபட்சம் 12 பேர் தங்கலாம்.

ஒரு பக்கம் 3 படுக்கைகள். இன்னொரு பக்கம் 3 அடுக்கு படுக்கைகள் இருக்கும்.

அறைகளில் நெட்ஒர்க் வசதி இருக்கும்.

தனிமையில் நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு தனி இடமும் ஒதுக்கப்பட்டிருக்கும்.

சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் விடுதிகள் அமைக்கப்படும்.

ஒவ்வொரு தளத்திலும் பொதுவான சமையல் அறை மற்றும் சாப்பாட்டு அறை இருக்கும்.

ஊழியர்களும் அதிகமான உணவு விருப்பங்களை வழங்க வணிகங்களுடன் இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.