Latest Tamil News Online

நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பயணிகள்!

சிங்கப்பூரில் மார்ச் 31-ஆம் தேதி குடிநுழைவு சோதனைச் சாவடிகளின் தானியக்க முறையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் தானியக்க முறையில் தடங்கல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 4 மணி நேரம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகளிலும், சாங்கி விமான நிலையத்திலும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது.

அதன் சேவை மீண்டும் மாலை 4 மணியளவில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதனைக் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தமது Facebook பக்கத்தில் பதிவிட்டிருந்தது.