சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூருடன் இணைய விரும்பும் சுவீடன்…!!!

சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூருடன் இணைய விரும்பும் சுவீடன்...!!!

சிங்கப்பூர்:சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூருடன் கைகோர்த்துச் செயல்பட சுவீடன் முன்வந்துள்ளது.

சிங்கப்பூரின் மக்கள் தொகை வேகமாக முதுமை அடைந்து வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, முதியோர் பராமரிப்பில் அதன் புதுமையான முறைகளை சிங்கப்பூருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் உதவ முடியும் என்று சுவீடன் நம்புகிறது.

நவம்பர் 19 முதல் 21 வரை சுவீடன் மன்னர் குஸ்டஃபு மற்றும் ராணி சில்வியா ஆகியோர் சிங்கப்பூருக்கு வருகை புரிய உள்ளனர்.

சுவீடன் மறதி மற்றும் அறிவாற்றல் குறைபாடுள்ள நோயாளிகளுக்கான ‘சில்வியாஹெம்மட் சென்டர்’ என்ற பகல்நேர பராமரிப்பு மையத்தை நடத்தி வருகிறது.

அந்த மையத்துடன் இணைந்த சில்வியா ஹெம்மெட் அறக்கட்டளை, ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல் 20,000 சர்வதேச சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

சுவீடனின் பரந்த மருத்துவத் துறையானது முதியோர் பராமரிப்பு, மூத்த மக்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு போன்ற துறைகளில் சிங்கப்பூருக்குப் பங்களிக்கும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இதனால் சிங்கப்பூருடன் சுவீடன் இணைந்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றும் பொழுது
அதன் தரம் மேன்மையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.