சிங்கப்பூர் : ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்!!
சிங்கப்பூரில் காலாங் ஆற்றில் இருந்து நபர் ஒருவர் மீட்கப்பட்டார்.அந்த நபர் டான் டொக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த நபர் டான் டொக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை Channel 8 செய்தியிடம் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தெரிவித்தது.
நவம்பர் 16-ஆம் தேதி அன்று இரவு சுமார் 11 மணியளவில் பிளாக் 39A, Bendemeer ரோட்டில் பல தீயணைப்பு வாகனங்கள்,அவசர உதவி வாகனங்கள்,காவல்துறை அதிகாரிகள் இருப்பதைப் பார்த்ததாக Channel 8 செய்தி நேயர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இரவு சுமார் 11.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
அவர் மீட்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாகவும் Channel 8 செய்தியிடம் காவல்துறை கூறியது.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL