மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி…!!!

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி...!!!

சிங்கப்பூர்: மஞ்சள் ரிப்பன் இயக்கம் 500 கைதிகளின் குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவியை வழங்க உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், கைதிகளின் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான உதவி இரட்டிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு 150 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்களைப் பெறுவார்கள்.

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது நிதியமைச்சர் சீ ஹொங் டாட் உரையாற்றினார்.

இந்தத் திட்டம் குடும்பங்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

அத்தகைய குடும்பங்களுக்கு நிதி ஆதரவு முக்கியமானது என்றாலும் கூட அதை விட முக்கியமானது உணர்ச்சிபூர்வமான ஆதரவு என்று கூறியுள்ளார்.

1,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் சேவையைப் பாராட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மஞ்சள் ரிப்பன் இயக்கம் 2010 முதல் 23,000 க்கும் மேற்பட்ட கைதிகளின் குடும்பங்களை ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.