சிங்கப்பூரில் சென்ற ஆண்டு வேலைப் பார்க்கும் இடத்தில் ஊழியர்களின் உடல் உறுப்புகளை துண்டிக்க நேரும் விபத்துக்கள் உயர்ந்தன. வரும் மாதங்களில் உற்பத்தி,கட்டுமான தளங்களில் கூடுதல் சோதனைகள் நடத்தப்படும்.
இதுபோன்ற உடல் உறுப்புகளை துண்டிக்க நேரும் விபத்துகளைத் தடுப்பதற்கு சோதனைகள் தீவிர படுத்தப்படுகிறதாக மனிதவள அமைச்சகம் கூறியது.
ஒரு நிறுவனம் விபத்துக்கு நேராமல் இருப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் பாதுகாப்பை வலுப்படுத்தி அபாயத்தைக் குறைக்க தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளது. அந்த தொழில்நுட்பம் ஊழியர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க உதவியது.
அந்த நிறுவனத்தில் 2020-ஆம் ஆண்டிற்கு பிறகு எவருக்கும் கையிலோ,விரலிலோ காயம் ஏற்படவில்லை.
ஊழியர்களின் பாதுகாப்பிற்காக உற்பத்தி நிறுவனங்கள் இன்னும் அதிக ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் உற்பத்தி துறையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது வேலையிட மரணங்களில் இரண்டாவது இடம்.
பெரும்பாலும் காயங்களுக்கு இயந்திரங்கள் சார்ந்த விபத்துகளே காரணம் என்றார் மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது.
2021-ஆம் ஆண்டிற்கும் கடந்த 2022-ஆம் ஆண்டிற்கும் உடல் உறுப்புகளை நீக்க வேண்டிய விபத்துகளின் எண்ணிக்கையில் பெரிதளவு வித்தியாசமில்லை என்று குறிப்பிட்டார்.
அவர் பாதுகாப்பான கைகள் இயக்கத்தை மனிதவள மூத்த துணையமைச்சர் தொடங்கி வைத்தார்.
பாதுகாப்பு தரச் சான்று பெற்ற இயந்திரங்களைத் தொழில்துறையில் பயன்படுத்தும்படி நிறுவனங்களுக்கு வலியுறுத்தினார்.
ஊழியர்கள் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வது சான்றிதழ் அங்கீகாரத்துக்கு அப்பாற்பட்டது என்று கூறினார்.