சிங்கப்பூர் : ஊழியர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி!!

சிங்கப்பூர் : ஊழியர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாட்டில் தடம் பதிக்க சுமார் 16 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுகிறது.

புதிய வெளிநாட்டு சந்தைகளில் நுழைவதற்கான திட்டம் அதற்கு உதவும்.

இதனால் உள்ளூர் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்படுகிறது.

இதற்காக இரண்டு ஆண்டுகளில் உள்ளூர் நிறுவனங்களின் 250 ஊழியர்கள் புதிய சந்தைகளில் பணியாற்ற அனுப்ப முடியும்.

பணியாளர்கள் வேலையில் இருந்து கொண்டே பயிற்சி பெறுகிறார்கள்.

இதனால் அவர்கள் பல்வேறு வணிக நடைமுறைகளைக் கற்றுக்கொள்ளலாம்.

அவர்கள் வெளிநாட்டு சந்தைகளில் தொடர்புகளை உருவாக்க முடியும்.

நிறுவனங்கள் அவர்களுக்கு குறைந்தபட்சம் 4,000 வெள்ளி மாத சம்பளமாக வழங்க வேண்டும்.

நிறுவனங்களுக்கு ஊழியர்களின் சம்பளத்தில் சுமார் 5,000 வெள்ளி வரை உதவித்தொகை வழங்கப்படும்.

மாதந்தோறும் ஊழியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சித் திட்டத்தில் இருந்து 3,000 வெள்ளி வரை வழங்கலாம்.

சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் பயிற்சித் திட்டங்களை உருவாக்க பங்குபெறும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.