சிங்கப்பூரில் 2025 இல் வெளியாகும் பாம்பு ஆண்டுக்கான சிறப்பு நாணயங்கள்!!

சிங்கப்பூரில் 2025 இல் வெளியாகும் பாம்பு ஆண்டுக்கான சிறப்பு நாணயங்கள்!!

சிங்கப்பூர்:சீன பஞ்சாங்கத்தின் படி, 2025 சீனப் புத்தாண்டானது பாம்பு ஆண்டாக அமைகிறது.

இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் நாணய வாரியம் சிறப்பு நாணயங்களை வெளியிடுவதாக இன்று அறிவித்தது.

பாம்பு ஆண்டுக்கான சிறந்த நாணயங்களை வாங்குவதற்காக மக்கள் ஆர்வமுடன் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1 முதல் பொதுமக்கள் 10 விதமான சிறப்பு நாணயங்களை வாங்க முடியும்.

ஹெண்டர்சன் வேவ்ஸ் நாணயங்களில் பின்னணியில் பாம்பின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

அனைத்து 10 வகையான நாணயங்களும் வெவ்வேறு வடிவம், கலவை, தோற்றம் கொண்டவை.

Singapore mint இணையதளத்தில் இன்று முதல் அடுத்த மாதம் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பொதுமக்கள் நாணயங்களுக்கு முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் நாணயங்களைப் பெற பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் நாணயங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான வித்தியாசமான நாணயங்களை தனது சேகரிப்பின் ஒரு அங்கமாக இணைப்பதற்கு நாணய சேகரிப்பாளர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.