தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் 10 வது ஆண்டு நிறைவு விழா...!!!!
சிங்கப்பூர்:தேசிய மொழிபெயர்ப்புக் குழு (NTC) சமூகம், திறமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த குழு இன்று தனது 10வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
தகவல் மற்றும் மின்னணு மேம்பாட்டுக்கான மூத்த துணை அமைச்சரும் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தலைவருமான திரு.டான் கியெட் ஹவ் இன்று காலை மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநாட்டு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.
கடந்த கால சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
திரு.டான் சமூகத்தை ஈடுபடுத்துதல், திறமையை ஊக்குவிப்பது மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகிய மூன்று உத்திகள் குறித்து பேசினார்.
லீ குவான் யூ இருமொழிக் கல்வி நிதியம், கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய நூலக வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய மொழிபெயர்ப்புக் குழு தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்தார்.
சமூகத்தை ஈடுபடுத்தும் நோக்கில் சிங்கப்பூரர்கள் இருமொழியை வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பல திட்டங்களை தொடர்ந்து ஆராயும் என்று கூறினார்.
திறனாளர்களை ஊக்குவிப்பதில் மொழிபெயர்ப்பு தொழில்துறையில் பணிக்குழு அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் மொழிபெயர்ப்பின் தரத்தை ஊக்குவிப்பதில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டத்தில் ஆலோசனை குழு பல வல்லுநர்களைக் கொண்டு செயல்படும் என்றும் அவர்கள் மொழிபெயர்ப்பு தொழில்நுட்ப தொடர்பில் பல ஆலோசனையை வழங்குவர் என்றும் கூறப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL