ஜிஎஸ்டி செலுத்தாமல் பொருட்களைக் கொண்டு சென்ற பயணிகளுக்கு அபராதம் விதிப்பு…!!!

ஜிஎஸ்டி செலுத்தாமல் பொருட்களைக் கொண்டு சென்ற பயணிகளுக்கு அபராதம் விதிப்பு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளில் சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்தத் தவறிய சுமார் 13,000 பயணிகளுக்கு 3 மில்லியன் வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு (2024) ஜனவரி முதல் அக்டோபர் வரை, ஜிஎஸ்டி செலுத்தாமல் சிங்கப்பூருக்கு வரி விதிக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு வந்த பயணிகள் பிடிபட்டனர்.

கடந்த ஆண்டு (2023) ஜனவரி முதல் அக்டோபர் வரை சுமார் 7,200 பயணிகள் பிடிபட்டுள்ளனர்.

அவர்களுக்கு சுமார் 2.3 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இதுவரை 46 பயணிகளுக்கு அதிகபட்சமாக 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி செலுத்தத் தவறிய பயணி அதிகபட்சமாக செலுத்த வேண்டிய வரித் தொகையின் 20 மடங்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.