Singapore News in Tamil

DBS, POSB வங்கி இணைய செயலில் UPI மூலம் எப்படி பணம் அனுப்புவது?

முதலில் உங்களுடைய மொபைல் போனில் DBS, POSB வங்கி இணைய செயலியை (ibanking) ஓபன் செய்யவும்.

அதில், Paynow என்பதை கிளிக் செய்யவும். அதன்பின், UPI India என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Transfer Overseas என்ற பக்கம் வரும்.

அதில் ENTER UPI ID என்று இருக்கும். யாருக்கு பணம் அனுப்ப உள்ளீர்களோ அவர்களுடைய UPI ID யை பூர்த்தி செய்யவும்.நீங்கள் பூர்த்தி செய்தபின், அது சரியானதா? இல்லை தவறானதா? என்று சரிபார்க்கும்(Verify). சரிபார்த்தபின், Green Color டிக் வரும்.

அதன்பின், SGD என்ற இருக்கும் இடத்தில் நீங்கள் எவ்வளவு அனுப்ப உள்ளீர்கள்? என்பதனைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்தபிறகு, இந்தியா ரூபாய் மதிப்பில் Convert ஆகிக் கொள்ளும்.

அதன்பிறகு, NEXT என்ற option யை கிளிக் செய்ய வேண்டும்.

Review Transfer என்ற பக்கம் ஓபன் ஆகும். அதில் நீங்கள் பூர்த்தி செய்ததை மற்றொருமுறை சரிபார்த்த பிறகு, Transfer now Option- யை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பின், உங்களுடைய பணம் Transfer ஆகிவிடும். Submitted என்றும், Green color டிக் வரும்.