Singapore News in Tamil

சலுகைக்கு ஆசைப்பட்டு சென்றோம்!ஏமாந்ததுதான் மிச்சம்!

கடந்த 2022-ஆம் ஆண்டு உணவு, பான புகார்கள் 38 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு உணவு, பான துறை விளம்பரங்கள் அதிகமான புகார்களைப் பெற்ற துறை.

இதனை சிங்கப்பூர் விளம்பர தரநிலை ஆணையம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

அதையடுத்து மேலும் அதிகமானோர் உணவகங்களுக்குச் சென்றனர்.

அதிகமானோர் உணவகங்களை நாடினாலும் அதற்கு ஈடாக விளம்பரங்கள் குறித்து மக்கள் சமர்ப்பித்த கருத்துக்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

அதில் அதிகமான புகார்களாக தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடிய விளம்பரங்கள் என கூறப்பட்டது.

விளம்பரங்களில் சலுகைகள் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும்.

ஆனால், அதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படும். விதிக்கப்படும் நிபந்தனைகளால் சலுகைகளைப் பெற முடியாமல் போகிறது என்றும் சில புகார்கள் குறிப்பிட்டிருந்தது.