தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நிலைமை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்…!!!

தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நிலைமை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்...!!!

சிங்கப்பூர்:தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இருந்து அதன் பயனாளர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

ரயில் பாதை முழுமையாக திறக்கப்பட்ட பிறகு ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் போக்குவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்றும் கேட்கப்பட்டது.

ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் 4 ஆம் கட்டம் இந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி திறக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்கு அருகில் உள்ள புதிய வசதிகளைப் பயன்படுத்துவதற்கு அதிகமான பயணிகள் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

வார நாட்களில் ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகளின் சராசரி எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறினார்.

மே மாத இறுதியில் ரயில் பாதையை 200,000 பேர் வரை பயன்படுத்தியதாகவும் அதுவே அக்டோபர் மாதம் 250,000 பேர் வரை அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டது.

ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் 6 ஆம் கட்டம் 2026 இல் திறக்கப்படும் போது அதிக பயணிகளை எதிர்பார்க்கலாம் என்றார்.

பரபரப்பான போக்குவரத்து நேரங்களில் மரீன் பரேட் சாலையில் போக்குவரத்து வேகம் 15 சதவீதம் வரை முன்னேற்றம் கண்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.