சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்துகளில் செல்லும் போது சத்தம் போடக் கூடாது!!

சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்துகளில் செல்லும் போது சத்தம் போடக் கூடாது!!

சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது மொபைல் போன்களில் இருந்து அதிக ஒலி எழுப்பவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்டது.

தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகிறதா என்றும் கேட்கப்பட்டது.

பொது போக்குவரத்தில் பயணிகள் பயணம் செய்யும் போது சத்தம் போடக்கூடாது.இதனை போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.

நினைவூட்டலுக்கு பிறகும் அவ்வாறு செய்பவர்கள் மீது ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றார்.

ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது என நினைவூட்டப்படுவதாக கூறினார்.

நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பொது போக்குவரத்து மன்றம் ஆகியவை பொது போக்குவரத்து நிறுவனங்களோடு இணைந்து கனிவன்பு இயக்கத்தை நடத்தி வருகின்றன.