Singapore News in Tamil

குப்புறப் படுத்திருந்த குழந்தை!மரணம்!

கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் Yong jing yu என்ற குழந்தைக்கு பராமரிப்பாளர் உணவளித்துள்ளார்.

அதன்பின் அந்த குழந்தையை `playpen´ எனும் விளையாட்டு இடத்தில் உறங்கவைத்துள்ளார். இதனை விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

பராமரிப்பாளர் சுமார் 6.20 மணியளவில் குழந்தையை குளிப்பாட்ட நினைத்துள்ளார்.

அப்போது குழந்தை மெத்தையில் குப்புறப் படுத்து இருப்பதைக் கண்டுள்ளார். குழந்தையைத் தூக்கும்போது உடல் அசைவின்றி இருந்துள்ளது.

உடனே தன் மகன் உதவியுடன் அவசர மருத்துவ சேவையைத் தொடர்புக் கொண்டுள்ளார்.

உதவி மருத்துவர்கள் நிகழ்வு இடத்திற்கு வந்தனர். குழந்தையின் உடல் உறைந்து இருப்பதை கண்டனர்.

உடனே,செங்காங் பொது மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.ஆனால், குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்னும் குழந்தையின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து மார்ச் 27-ஆம் தேதி நீதிமன்றத்தில் மரண விசாரணை தகவல்களை வெளியிட்டது.

அந்த குழந்தை 3 மணி நேரத்துக்கு குழந்தை அறை ஒன்றில் தனித்து விடப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து விசாரணைத் தொடங்கப்பட்டது.இந்த விசாரணைக்கு குழந்தையின் பெற்றோர் வந்திருந்தனர்.அவர்களுடைய அடையாளம் வெளியிடப்படவில்லை.

குழந்தையின் தந்தை விசாரணை அதிகாரி கூறிய விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்பின் அவரும் சில கேள்விகளை முன்வைத்தார்.

விசாரணை அதிகாரி இது குறித்து பராமரிப்பாளரிடம் கூடுதல் தகவல்களைப் பெறுமாறு உத்தரவிட்டது.