சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு பொது இடங்களை சுத்தம் செய்யும் போது அதிலிருந்து அகற்றப்படும் கழிவுகளின் அளவை NEA கண்காணிப்பதில்லை என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.
சுத்தம் செய்யும் போது அனைத்து வகையான குப்பைகளும் இலைகள் போன்ற கரிம கழிவுகளும் ஒன்றாக சேகரிக்கப்படுவதாக கூறினார்.
மாறாக, நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம், நகராட்சிகள், பள்ளிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் போன்ற பங்குதாரர்களுடன் இணைந்து சிங்கப்பூரை பசுமையாக வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு பொது சுகாதார ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தி, இந்த ஆண்டு இதுவரை 130 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், குப்பைகள் அதிகமாக கொட்டப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) சிங்கப்பூரில் உள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் சில தனியார் தோட்டங்கள் போன்ற பொது இடங்களை சுத்தம் செய்வதை மேற்பார்வையிடுவதாகக் கூறினார்.
சிங்கப்பூரை கழிவுகள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகள் குறித்த கேள்விக்கு திருவாட்டி கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.