சீனாவின் புதிய பிரதமராக Lee Qiang பதவியேற்றுள்ளார்.அவரின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் சீனாவிற்கு செல்கிறார்.
சிங்கப்பூர் பிரதமர் Guangdong சென்ற பிறகு ஹைனானில் நடக்கும் போ´ஆவ் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவார்.
சீன அதிபர் சி சின்பிங்கை தலைநகர் பெய்ஜிங்கில் சந்திக்க உள்ளார்.
சிங்கப்பூர் பிரதமரின் சீனப் பயணம் சனிக்கிழமையுடன் முடிவடைக்கிறது.
சிங்கப்பூர் பிரதமருடன் அவரது மனைவி மற்றும் சில அமைச்சர்களும் செல்கின்றனர்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சிங்கப்பூரில் இல்லாத காலத்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்,மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் இருவரும் தற்காலிகப் பிரதமராக செயல்படுவர்.
இன்று சிங்கப்பூர் பிரதமர் லீ அதிகாரத்துவப் பயணமாக சீனாவுக்கு செல்கிறார்.