Singapore News in Tamil

குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு படிப்படியாக உயரும் சம்பளமுறை! நிறுவனங்களுக்கு கௌரவிப்பு!

சிங்கப்பூரில் சிட்டியில் PW முத்திரை சாலைக் கண்காட்சி நடந்தது.

இதில் மனிதவள மூத்த துணை அமைச்சர் Zaqy Mohamad கலந்துக் கொண்டார்.

அரசாங்கம், நிறுவனங்கள், பயனீட்டாளர்கள் உள்ளிட்டோர் தரப்புகளிடமிருந்து ஒருங்கிணைந்த ஆதரவு குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்குத் தேவை என்று மூத்த அமைச்சர் பேசினார்.

குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்குச் சமூகமும் உதவ வேண்டும் என்று கூறினார்.

அதேபோல்,வருமான ஏற்றத்தாழ்வைப் போக்க வேண்டும்.

சிங்கப்பூரை அனைவரையும் உள்ளடக்கியதாக உருவாக்க விரும்புவதாக மூத்த அமைச்சர் கூறினார்.

கிட்டத்தட்ட 2,000 க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு Progressive wage mark என்ற முத்திரை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கௌரவிக்கப்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டின் மூலம் வாழ்க்கைத் தொழில் முன்னேற்றத்திற்கு வழி அமைத்தல், படிப்படியாக உயரும் சம்பளம் முறை போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுகிறது.

இந்த சாலை கண்காட்சி PW குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களை ஈடுபடுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சாலைக் கண்காட்சியில் விளையாட்டுகள், நேரடி நிகழ்ச்சிகள், அன்பளிப்பு பொருள் வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகள் இடம் பெற்றது.

இந்நிகழ்ச்சியில் youtube பிரபலம் Annette Lee, சிங்கப்பூர் ஐடல் வெற்றியாளர் Taufix Batisah ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.