SQ7858 விமானம் சிங்கப்பூரிலிருந்து மார்ச் 24-ஆம் தேதி இரவு புறப்பட்டது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் சீனாவின் ஷங்ஹாய் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது அவசர அவசரமாக ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் தீ ஏற்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி அடித்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விமானத்தை விமானி சோதித்து பார்த்தப்பிறகு, அதனைத் தரையிறக்க முடிவு செய்தார்.
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் நேரப்படி இரவு 10.50 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறக்கப்பட்டபின்,புலனாய்வு நடத்தப்பட்டது.
அதில் புகையோ, தீயோ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டது.
விமானத்துக்காக ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் ஓர் ஓடுபாதையை மூடியதாக கூறப்பட்டது.
அங்கு 9 விமானங்கள் தரையிறங்கவிருந்தது அவற்றை மற்ற ஓடுபாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டது என்று கூறினர்.