ஜொகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம் எனும் RTS திட்டமிட்டப்படி நிறைவு பெறும்.
அதற்கான முயற்சியில் முன்னேறி வருவதாகவும் தெரிவித்தது.45 விழுக்காடு கட்டுமானப் பணிகள் சிங்கப்பூர் தரப்பில் நிறைவடைந்து உள்ளன.
இதனைப் போக்குவரத்து அமைச்சர் க. சண்முகம் கூறினார்.
இத்திட்டம் முழுமையாக முடிவடைந்ததும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பயணம் மிகவும் சுலபமாகும்.
.இதன்மூலமாக 5 நிமிடங்களில் உட்லண்ஸ்க்கும் ஜொகூர் பாருவின் புக்கிட் சாகருக்கும் பயணம் செய்ய முடியும்.
இது மணிக்கு ஒவ்வொரு வழியிலும் கிட்டத்தட்ட 10,000 பயணிகளுக்கு அதன் சேவைகளை செய்யும்.
2021-ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.