Latest Tamil News Online

அடிப்படைப் பண வீக்கத்தில் வசிப்பிடச் செலவும், தனியார் போக்குவரத்து செலவும் சேர்க்கப்படுகிறதா?

சென்ற மாதம் ஆண்டு அடிப்படையில் அடிப்படைப் பண வீக்கம் மாற்றம் ஏதும் இல்லாமல் 5.5 விழுக்காடாக நீடிக்கிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த நிதி நிபுணர்கள் இதற்கு முன்னதாக அடிப்படைப் பணவீக்கம் 5.8 விழுக்காடாக எதிர்பார்க்கலாம் என முன்னுரைத்திருந்தனர்.

அடிப்படைப் பண வீக்கம் ஜனவரி மாதத்தில் 5.1 விழுக்காட்டிலிருந்து 5.5 விழுக்காடாக உயர்ந்திருந்தது.இந்த விகிதமானது 2008 நவம்பருக்குப் பிறகு இது அதிகம்.

சேவைக் கட்டணம் குறைந்ததால் இதனால் லாபம் கிடைக்கிறது.

ஆனால்,சில்லறை விற்பனைப் பொருட்கள்,மின்சாரம்,எரிவாயு முதலியவற்றின் விலை உயர்வால் லாபம் வலுவிலக்க செய்வதாக தெரிவித்தது.

சிங்கப்பூர் நாணய வாரியமும்,வர்த்தக, தொழில் அமைச்சகமும் பண வீக்கம் மாற்றம் ஏதும் இல்லாமல் நீடித்து வருவதாக தெரிவித்தது.

அடிப்படைப் பண வீக்கத்தில் வசிப்பிடச் செலவும்,தனியார் போக்குவரத்து சேர்க்கப்படுவதில்லை என தெரிவித்தன.