சிங்கப்பூர் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி நிச்சயமாக போட்டிருக்க வேண்டுமா!! என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

சிங்கப்பூர் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி நிச்சயமாக போட்டிருக்க வேண்டுமா!! என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல பலவிதமான டாக்குமெண்ட்கள் தேவைப்படுகிறது.ஒவ்வொரு டாக்குமெண்டும் வேலைக்கு தகுந்தார் போல் மாறுபடும்.எந்தெந்த வேலைக்கு என்னென்ன டாக்குமெண்ட்கள் தேவை என்பதை நாம் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி பதிவிட்டு வருகிறோம்.

சிங்கப்பூர் செல்ல அனைத்து விதமான பாஸ்களுக்கும் கட்டாயம் தேவைப்படுவது கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்.பல பேர் கொரோனாவிற்கு பிறகு தடுப்பூசி போடாமல் இந்தியாவில் உள்ளனர்.அவர்கள் தடுப்பூசி போடாத காரணத்தினால் சிங்கப்பூர் செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.

இந்தியாவிலும் பல இடங்களில் தடுப்பூசி போடுவதை நிறுத்தி விட்டார்கள்.கொரோனா முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் இப்போதும் ஏன் தடுப்பூசி சான்றிதழ் கேட்கிறார்கள் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

தடுப்பூசி போட்டால் தான் சிங்கப்பூர் செல்ல முடியுமா?

தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் செல்கையில் சிங்கப்பூரில் பெரும்பாலும் உங்கள் தடுப்பூசி சான்றிதழை கேட்பதில்லை.ஆனால் இந்தியாவில் விமான நிலையத்தில் நீங்கள் உள்ளே செல்லும் போது உங்கள் தடுப்பூசி சான்றிதழை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

எனவே இப்போதும் தடுப்பூசி சான்றிதழ் தேவைப்படுகிறது.
உங்களுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எங்கே போடுகிறார்கள் என்று தெரிய வேண்டும் என்றால் இந்த பதிவிற்கு கீழே கமெண்டில் கேட்கவும் நமது அடுத்த பதிவில் உங்களுக்காக நாங்கள் அதை சொல்கிறோம்.