சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்திய பிரிட்டிஷ் பாப் கலைஞர் டுவா லிப்பா...!!!
சிங்கப்பூர்:பிரிட்டிஷ் இன் புகழ் பெற்ற பாப் பாடகி துவா லிபா சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார்.
அவரது உலக இசை பயணத்தின் முதல் இரண்டு நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நேற்றும் இன்றும் நடைபெற உள்ளது .
நேற்று இரவு 8 மணிக்கு அவரது இசை நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
2018க்குப் பிறகு துவா லிபா சிங்கப்பூருக்குத் வருகை தந்துள்ளார்.
இதனால் அவர் சிங்கப்பூர் சென்று காத்தோங் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.
அங்கு, அவர் ஸ்ரீ செண்பக விநாயகர் கோவிலுக்கு வெளியே நின்று, பிரபலமான உள்ளூர் உணவுகளான லக்சா மற்றும் மிளகாய் நண்டு போன்றவற்றை ருசிப்பது போன்ற படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அவர் ரசிகர்களிடம் வேறு என்ன உள்ளூர் உணவுகளை முயற்சிக்க வேண்டும் என்று தனது பதிவில் கேட்டார்.
அதற்கு நெட்டிசன்கள் சிக்கன் ரைஸ், சாத்தே, நாசி கோரெங்,பிரியாணி என்று பிரமாண்ட பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி இம்மாதம் (நவம்பர் 2024) 6ஆம் தேதி மட்டுமே நடத்தப்பட இருந்தது.
ஆனால் ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் பார்த்து கூடுதல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முடிவெடுத்தார்.
நேற்று தொடங்கிய துவா லிபாவின் உலகச் சுற்றுப்பயணம் அடுத்த ஆண்டு (2025) அக்டோபரில் அமெரிக்காவில் நிறைவடையும் என கூறப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg