சிங்கப்பூரிலிருந்து திரும்ப அனுப்பப்பட கூடாது என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

சிங்கப்பூரிலிருந்து திரும்ப அனுப்பப்பட கூடாது என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

சிங்கப்பூருக்கு செல்வது பலரது கனவு.நீங்கள் எப்படியாவது சிங்கப்பூருக்கு சென்று விடுவீர்கள்.ஆனால் நீங்கள் சென்றவுடன் உடனடியாக வேலைக்கு செல்ல அனுமதி அளிக்க மாட்டார்கள் .

SOC :

PCM Permit, Shipyard Permit, Marine Permit, Work Permit மூலம் சிங்கப்பூருக்கு செல்பவர்களுக்கு SOC தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் பாஸ் ஆனால் மட்டுமே சிங்கப்பூரில் இருக்க அனுமதி அளிப்பார்கள். ஒரு வேளை நீங்கள் fail ஆகிவிட்டால் உங்கள் தாய்நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவீர்கள்.நீங்கள் மூன்று முறை முயற்சி செய்யலாம். இதற்கு முன்னதாக இந்த தேர்வு மிகவும் எளிதாகவே இருக்கும்.இதற்கு முன்னதாக இந்த தேர்வு மிகவும் எளிதாகவே இருந்தது.ஆனால் தற்போது மிகவும் கடினமாக உள்ளது.உங்களுக்கு SOC கிளாஸ் எடுக்கப்படும். இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் நாள் கிளாஸ் எடுப்பதோடு Practical நடைபெறும். இரண்டாவது நாள் தேர்வு நடைபெறும்.கிளாஸ் நடைபெறும் போது நோட், பென் எடுத்து செல்லுங்கள்.உங்களுக்கு பாடம் எடுப்பவர் எந்தெந்த கேள்வி தேர்வுக்கு வர வாய்ப்புள்ளது என்று கூறுவார்கள். அதனை நீங்கள் எழுதி வைத்துக்கொண்டு படித்து கொள்ளுங்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் என முக்கியமான கேள்விகள் கேட்கப்படும். வினா-விடை போல் இல்லாமல் Choose the best answer என்ற முறையில் இருக்கும். நீங்கள் இந்த தேர்வில் பாஸ் ஆகவில்லை என்றால் கண்டிப்பாக உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.அதனால் கிளாஸ் நடக்கும்போது கவனமாக கவனியுங்கள். தேர்வில் வெற்றி பெறுங்கள்.

மெடிக்கல் :

ஒரு சில ஏஜென்சிகள் மெடிக்கல் போட வேண்டாம் என்று கூறுவார்கள். இன்னும் ஒரு சிலர் மெடிக்கல் போட வேண்டும் என்று கூறுவார்கள். மெடிக்கல் டெஸ்ட்டில் fit ஆக இருந்தால் மட்டுமே சிங்கப்பூருக்கு செல்லுங்கள். ஏனென்றால் சிங்கப்பூரில் டெஸ்ட் எடுக்கும் போது unfit என்று ரிசல்ட் வந்தால் உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.இதில் குணப்படுத்தக்கூடிய நோய்கள், குணப்படுத்த முடியாத நோய்கள் என்று உள்ளது. குணப்படுத்தக்கூடிய நோய்களாக இருந்தால் அங்கேயே உங்களுக்கு டிரீட்மென்ட் அளிக்கப்பட்டு குணமடைந்த பிறகு Finger Print வைக்க MOM அனுமதி அளிப்பார்கள்.

குணப்படுத்த முடியாத நோய்கள் :

ஓர் உதாரணம்,

Color Blindness, HIV, High Sugar, High Pressure

நீங்கள் திரும்ப வந்த பிறகு நீங்கள் கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

வெளிப்படையாக இருங்கள் :

நீங்கள் அங்கு எந்த வேலைக்கு செல்ல உள்ளீர்களோ அந்த வேலைத் தெரிந்தால் மட்டும் அதற்கு செல்லுங்கள். இன்டெர்வியூ நடைபெறும் போது தெரியும் என்று கூறி விட்டு அங்கு சென்றவுடன் உங்களுக்கு அந்த வேலை தெரியாது என்று கூறினால் கண்டிப்பாக திருப்பி அனுப்பப்படுவீர்கள்.அதனால் உங்களுக்கு அந்த வேலை தெரியுமா? தெரியாதா? என்பதை வெளிப்படையாக கூறி விடுங்கள்.

 

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg