சிங்கப்பூர் : திடீரென நிறுத்தப்பட்ட சேவை!!மனிதவள அமைச்சகத்தில் கோரிக்கையை சமர்ப்பித்த ஊழியர்கள்!!
Yeap Transport நிறுவனத்தில் பணி புரியும் சுமார் 40 ஊழியர்கள் நிறுவனத்துக்கு எதிராக மனிதவள அமைச்சகத்தில் சம்பளக் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.
முத்தரப்பு கூட்டணி அவர்களுக்கு உதவி வருவதாக CNA விடம் உறுதிப்படுத்தியது.
மேலும் விவரங்களை வழங்க மருத்துவவிட்டது.
வார இறுதியில் நிறுவனம் அதன் சேவைகளை திடீரென ரத்து செய்ததை அடுத்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.
திடீரென ரத்து செய்ததால் பெய் சுன் பப்ளிக், சீடார் தொடக்கப் பள்ளிகள் பாதிக்கப்பட்டன.
மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக இரு பள்ளிகளின் முதல்வர்களும் கூறினர்.
மேலும் பேருந்து சேவை மாற்றத்திற்கு பெற்றோர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg