சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் எங்கு அடிக்கலாம்!! தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!
சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது.அதற்கான காரணம் அங்கு நல்ல சம்பளம்,பாதுகாப்பு, சம்பள உயர்வு கிடைக்கிறது.
சிங்கப்பூர் செல்வதற்கு பல வகையான Pass கள் உள்ளன.
🔸 S.PASS
🔸 E.PASS
🔸 NTS
🔸 Work Permit
🔸 PCM Permit
🔸 SHIPYARD
🔸 TEP
🔸 TWP
எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும் பாஸ்கள் இருந்தாலும் சிங்கப்பூர் செல்வதற்கு மிகவும் சிறந்த வழி என்னவென்றால் டெஸ்ட் அடித்து செல்வது தான்.
ஏன் டெஸ்ட் அடித்து சிங்கப்பூருக்கு செல்வது சிறந்தது?
நீங்கள் சிங்கப்பூருக்கு டெஸ்ட் அடித்து செல்லும் பொழுது முதல்முறை மட்டுமே அதிகமாக செலவாகும்.பிறகு வேறு கம்பெனிக்கு செல்லும் பொழுது குறைந்த செலவிலேயே செல்லலாம்.பணம் ஏதும் கட்டாமல் கூட செல்ல முடியும்.ஆனால் மற்ற பாஸ்களில் செல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் நீங்கள் அதிகமான பணத்தை செலவிட நேரும்.இதனாலேயே பலரும் சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடித்து செல்வது சிறந்தது என்று கருதுகின்றனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூர் செல்வதில் டெஸ்ட் அடிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.
அதில் குறிப்பாக கோட்டா பிரச்சனை சிங்கப்பூர் செல்வதற்கு முன்பெல்லாம் தோராயமாக ஒரு மாதத்தில் 500 முதல் 1000 பேர் வரை செல்வார்கள்.ஆனால் இப்போது மாதத்திற்கு 50 முதல் 100 பேர் செல்வதே கடினமாக உள்ளது.
மாதத்திற்கு குறைவான ஆட்களே சிங்கப்பூர் செல்வதால் டெஸ்ட் அடிப்பவர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கு டெஸ்ட் அடிக்கலாம்?
காத்திருக்கும் நேரம் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் டெஸ்ட் அடித்து தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தால் , தமிழ்நாட்டிலும் ஹைதராபாத்திலும் டெஸ்ட் சென்டர் ஓபனில் உள்ளது.
ஒரு சிலர் தமிழ்நாட்டில் ட்ரைனிங் கொடுத்து ஹைதராபாத்தில் டெஸ்ட் அடிக்கின்றனர்.
இன்னும் ஒரு சிலர் தமிழ்நாட்டிலேயே டெஸ்ட் அடிக்கின்றனர்.
இப்போது தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஹைடெக் இன்ஸ்டிடியூட்டில் டெஸ்ட் நடைபெற்று கொண்டு தான் உள்ளது.ஆனால் அதற்கான காத்திருக்கும் காலம் அதிகம். நீங்கள் காத்திருக்க தயாராக இருந்தீர்கள் என்றால் முயற்சி செய்து பாருங்கள்.இன்னும் ஒரு சில இன்ஸ்டிடியூட்டுகளிலும் டெஸ்ட் அடிக்க வைக்கின்றனர்.
நீங்கள் டெஸ்ட் அடிக்க போகும்பொழுது அதிகமான முன்பணம் கட்ட வேண்டாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg