சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தின் முக அடையாள காணும் நடைமுறையில் நவம்பர் 3-ஆம் தேதி நள்ளிரவு கோளாறு ஏற்பட்டது.இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.இந்த தகவலை 8World செய்திதளம் வெளியிட்டது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குடிநுழைவு,சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தால் எந்த பயணிகளும் விமானத்தில் ஏறுவதை தவறவிடவில்லை.
பின்னிரவு சுமார் 2.40 மணியளவில் இயல்புநிலைக்கு சேவை திரும்பியதாக கூறப்படுகிறது.
பயணிகளிடம் இந்த இடையூறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார்.