சிங்கப்பூருக்கு புதிதாக சென்றவரா?நீங்கள்!! உங்களுடைய பாஸ்போர்ட் தேதி முடிய போகிறதா?
சிங்கப்பூருக்கு எப்படியாவது சென்று விடுவோம். ஆனால் அங்கு சென்ற பிறகு உங்களுடைய பாஸ்போர்ட்டின் காலாவதி தேதி உஙகளுக்கு நினைவுக்கு வரும். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இப்பதிவு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களைத் தேர்வு செய்யும் கம்பெனி உங்களின் பாஸ்போர்ட் காலாவதி தேதி குறைந்தது 6 மாதங்கள் இருந்தால் மட்டுமே தேர்வு செய்து ip வழங்குவார்கள்.அதற்கு குறைந்த மாதங்களாக இருந்தால் உங்களை ரெனீவல் செய்ய சொல்லுவார்கள்.
உங்களின் பாஸ்போர்ட் காலாவதி தேதியை நியாபகத்தில் வைத்து கொள்வது நல்லது. ஏனென்றால் ஒரு சில கம்பெனிகள் உங்களின் பாஸ்போர்ட் காலாவதி தேதி நெருங்குவதற்கு முன்னதாக உங்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட்டை உங்களிடம் கொடுத்து ரெனீவல் செய்யுமாறு கூறுவார்கள். ஆனால் ஒரு சில கம்பெனிகள் ஏதேனும் ஒரு சில காரணத்தால் அதை மறந்துவிடுவதும் உண்டு. அதனால் நீங்கள் அதனை நியாபகத்தில் வைத்து கொள்வது மிகவும் நல்லது.உங்களுடைய பாஸ்போர்ட் முடிவதற்கு அதிகபட்சமாக 4 முதல் 6 மாதங்களுக்குள் ரெனீவல் செய்து விடுங்கள்.
சிங்கப்பூரில் எங்கு ரெனீவல் செய்ய வேண்டும் :
www.blsinternational.com எனும் இணைய பக்கத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.நீங்கள் எந்த தேதியில் சிங்கப்பூர் வர வேண்டும் என்பதை அவர்கள் கூறி விடுவார்கள். அவர்கள் கூறிய தேதியில் நீங்கள் நேரடியாக சிம் லிம் டவரில் 14வது மாடிக்கு செல்ல வேண்டும்.அவர்களே உங்களுக்கான form – ஐ பூர்த்தி செய்து விடுவார்கள். நீங்கள் கொண்டு சென்ற டாக்குமெண்டை verify செய்தவுடன் உங்களிடம் கொடுத்து விடுவார்கள்.
தேவையான டாக்குமெண்ட்கள் :
🔸 Original Passport & Xerox
🔸 Original Work Permit & Xerox
🔸 Appointment letter Xerox
எவ்வளவு கட்டணம்?
$137 சிங்கப்பூர் வெள்ளி பணமாக பெற்று கொள்வார்கள்.
மேலும் கொரியருக்கு $16 வெள்ளி பெற்றுக்கொள்வார்கள்.
உங்களுடைய பாஸ்போர்ட் கொரியரில் கைக்கு வந்துவிடும்.குறைந்தது 10 முதல் 15 days க்குள் உங்கள் கைக்கு பாஸ்போர்ட் வந்துவிடும்.
நீங்கள் உங்களுடைய பாஸ்போர்ட்டில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்று நினைத்தாலோ அதை அங்கு மாற்றிக் கொள்ளலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0