சிங்கப்பூரில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள ஓர் நிறுவனம்!!

சிங்கப்பூரில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள ஓர் நிறுவனம்!!

சிங்கப்பூர்: SPH மீடியாவின் தொழில்நுட்ப பிரிவில் 34 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SPH இன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மாறிவரும் ஊடகத் துறையில் போட்டித்தன்மையுடன் இருக்க தொழில்நுட்பப் பிரிவை நெறிப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

பணிநீக்கங்களின் எண்ணிக்கை SPH இன் தொழில்நுட்ப ஊழியர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும்.

நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி லோ யு யிங் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கேய்தயா மாவ் ஆகியோர் இன்று( நவம்பர் 4) காலை 9.25 மணிக்கு ஒரு செய்தி வெளியீட்டில் இந்த தகவலை வெளியிட்டனர்.

தொழில்நுட்பப் பிரிவில் உள்ள பல்வேறு நிர்வாகிகளை மறுசீரமைப்பதன் காரணமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

பணி நீக்கத்தால் நிறுவனத்தின் பல்வேறு குழுக்கள் மற்றும் நிலைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவவும், முத்தரப்பு வழிகாட்டுதல்களின்படி பலன் தொகுப்புகளை வழங்கவும் உறுதி கொண்டுள்ளதாக தெரிவித்தது.