ஸ்பெயினின் மிக மோசமான வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது.பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டனர் அவர்களின் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவர்களை மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
வெலன்சியா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் உயிரிழப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
வெள்ளத்தால் பாலங்கள் சேதமடைந்தன.மரங்களும்,வீட்டின் இடிந்த பாகங்களும் ஆங்காங்கே குவியல் போல் காட்சியளிக்கின்றன.
நகரங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
வெள்ள அபாயம் குறித்து முன்னரே அதிகாரிகள் எச்சரித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.