மூளை தானம் செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம்..!!!

மூளை தானம் செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகளைக் கண்டறிய அதிகமானோரை மூளையை தானம் செய்யுமாறு வலியுறுத்துகிறது.

மூளை தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நரம்பியல் கோளாறுகள் மற்றும் அவற்றின் ஆய்வுகள் குறித்து பொதுமக்களிடத்தில் விவாதிக்கப்படும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் “மூளை வங்கி” அமைக்கப்பட்டது.

அதன் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், Duke-NUS மருத்துவப் பள்ளி மற்றும் A*Star ஆராய்ச்சி அமைப்பும் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டன.

இறந்த பிறகு மூளையை தானம் செய்ய 380 பேர் பதிவு செய்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவின் ஒரே மூளை வங்கி சிங்கப்பூரில் இயங்குகிறது.

ஆனால் வங்கி இதுவரை 9 மூளைகளை மட்டுமே பெற்றுள்ளது.

முதற்கட்ட பரிசோதனைக்காக மூளை திசு விரைவில் தானமாக வழங்கப்படும்.

சிங்கப்பூரில் வயதான மக்கள் அல்சைமர் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதால் மூளை தானம் மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.