கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் பலி!! 41 வயது ஓட்டுநர் கைது!!

கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் பலி!! 41 வயது ஓட்டுநர் கைது!!

சிங்கப்பூர்: மரினா ஈஸ்ட் டிரைவில் கட்டுமானப் பணிக்காக சென்ற கான்கிரீட் கலவை லாரி ஒன்று வெளிநாட்டு ஊழியர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்டோபர் 30 ஆம் தேதி காலை 7.50 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக லாரி மரினா ஈஸ்ட் பகுதிக்குள் நுழைந்து கோ கொக் லியோங் நிறுவனத்தில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளி மீது மோதியதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த 46 வயது கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தார் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர் சம்பவ இடத்தில் உறுதி செய்தார்.

இந்நிலையில், கவனக்குறைவால் உயிரிழப்பு ஏற்படுத்தியதாக 41 வயது லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முழு கட்டுமான தளமும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறியப்படுகிறது. மேலும் தோண்டிய பொருட்களை சேமிப்பதற்காக அந்தப்பகுதி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழப்பு சம்பவம் நடந்த எண்ணெய் நிரப்பும் பகுதியில் அனைத்து வாகன நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அமைச்சகம் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூலை முதல் அக்டோபர் வரையிலான நடைமுறையில் இது ஏழாவது பணியிட மரணமாகும்.

இந்த ஆண்டு 26 பணியிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.