சிங்கப்பூரில் கடினமான வேலைகள் என்ன என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? லிங்கை கிளிக் செய்யவும்!!

சிங்கப்பூரில் கடினமான வேலைகள் என்ன என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? லிங்கை கிளிக் செய்யவும்!!

அனைவருக்கும் சிங்கப்பூர் செல்வது என்பது அதுவும் குறிப்பாக வேலைக்கு செல்ல வேண்டும் என்பது ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடும். ஆனால் அங்கு வேலை எப்படி இருக்கும் என்று தெரியாமல் செல்லும் ஒரு சிலர் சென்ற வேகத்திலேயே தாய்நாடு திரும்பி விடுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் வேலை எவ்வளவு கடினமானது?என்பது குறித்து தெரியாமல் செல்வதுதான்.இந்த பதிவில் சிங்கப்பூரில் ஒரு சில கடினமான வேலைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நீங்கள் சிங்கப்பூர் செல்லும் பொழுது நீங்கள் எந்த வேலைக்கு செல்கிறீர்களோ அந்த வேலை எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதென முழு தகவல்களையும் தெரிந்து கொண்ட பின் சென்றால் நீங்கள் கட்டிய பணம் வீணாகாமல் இருக்கும்.

1. Garden Work :

கார்டன் ஒர்க் என்றதும் நீங்கள் ஹோட்டலில் அல்லது வீட்டிலோ தோட்டம் போட்டு அதை பராமரிக்கும் வேலை என்று நினைத்து விடாதீர்கள். சிங்கப்பூரில் உள்ள ரோடுகளில் இருபுறமும் புல் நிறைந்திருக்கும்.அதை நீங்கள் வெட்ட வேண்டும்.அதற்கு உங்களுக்கு ஒரு இயந்திரம் தருவார்கள்.அந்த இயந்திரம் மிகவும் கனமாக இருக்கும் அதை உங்கள் தோள்பட்டையில் மாட்டிக்கொண்டு நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியதாக இருக்கும்.இது மிகவும் கடினமான வேலை.

2. Gable Work :

இந்த வேலையை பொருத்தவரை நீங்கள் மிகவும் கடினமான எடை கொண்ட அதிகமான கேபுளை இழுக்க வேண்டி வரும்.இதுவும் மிகவும் கடினமாக இருக்கும்.


3.Shipyard work :

இந்த வேலையும் சிங்கப்பூரில் உள்ள ஒரு சில கடினமான வேலைகளில் ஒன்று. இந்த வேலையில் நீங்கள் கப்பலுக்குள் வேலை செய்ய வேண்டி வரும். கப்பலுக்குள் அதிகமான புகை மற்றும் மாசு காற்று இருக்கும்.அதில் நீங்கள் வேலை செய்ய வேண்டியதாக இருக்கும்.அதிகமான எடை தூக்குவது போன்றும் இருக்கும்.

4. Construction work :

கன்ஸ்ட்ரக்சன் ஒர்க் கடினமான வேலை தான்.அதிலும் குறிப்பாக பிரேக்கர் அடிக்கும் வேலை மிகவும் கடினமாக இருக்கும்.நீங்கள் கன்ஸ்ட்ரக்ஷன் பர்மீட்டில் வந்தால் பிரேக்கர் அடிக்கும் வேலைக்கு வரும் பொழுது அதற்கு தயாராக வரவும்.

இது போன்ற வேலைகள் உங்களுக்கும் கிடைக்கலாம் அப்படி கிடைக்கும் பொழுது இந்த வேலை எந்த அளவிற்கு கடினமாக இருக்கும் என்று தெரிந்து கொண்ட பின் நீங்கள் வந்தீர்கள் என்றால் உங்களது பணம் வீணாகாது.நீங்கள் திரும்ப செல்லாமல் இங்கேயே வேலை செய்து உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.