சிறையில் சக கைதியை தாக்கிய நபர்!! ஏற்கனவே தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் பிரம்படிகளுடன் கூடிய தண்டனை விதிப்பு!!

சிறையில் சக கைதியை தாக்கிய நபர்!! ஏற்கனவே தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் பிரம்படிகளுடன் கூடிய தண்டனை விதிப்பு!!

சிறைச்சாலையில் சக கைதியைத் தாக்கிய karrtik Stalniraj என்ற கைதிக்கு கூடுதலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் உள்ள அடகு கடையில் கொள்ளையடித்ததால் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாழ்க்கையைக் கழித்து வருகிறார். அவருக்கு 2022 ஆம் ஆண்டில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

அவர் அவ்வாண்டு சக கைதி கேசவா விநாயக மூர்த்தியுடன் சில வாக்குவாதங்களில் கார்த்திக் ஈடுபட்டார்.

கார்த்திக் ரேசர் போன்ற பொருளைச் சுற்றி கயிறைக்கட்டி அதை ஆயுதமாக்கி கேசவாவின் முகத்தில் கீறினார. அதனால் அவரது முகத்தில் 15 சென்டிமீட்டர் நீளத்துக்கு கீறல் ஏற்பட்டது. அது தழும்பாகவும் மாறியது.

ஏற்கனவே சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் கார்த்திக்கு சக கைதியை தாக்கிய குற்றத்திற்காக கூடுதலாக 3 ஆண்டு சிறைத் தணடனை மற்றும் 4 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளன.