தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!!

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!!

இந்தியாவின் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது சொத்தின் பெரும்பகுதியை தனது செல்ல பிராணியை பராமரிப்பதற்காக ஒதுக்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

86 வயதான திரு.டாடா கடந்த மாதம் 9ஆம் தேதி காலமானார்.

அவர் 100 பில்லியன் ரூபாய் (சுமார் 1.6 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்புள்ள சொத்தை விட்டுச் சென்றார்.

‘டிட்டோ’ என்ற நாய்க்கு வரம்பற்ற பணம் செலவழிக்கலாம் என தனது உயிலில் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நாயை பராமரிப்பதற்கான தெளிவான வழிமுறைகளை அவர் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அவர் தனது செல்லப்பிராணியின் மீது வைத்துள்ள அன்பை உணர முடிகிறது.

செல்லப்பிராணிகளுக்காக சொத்துக்களை அர்ப்பணிப்பது இந்தியாவில் பொதுவானதல்ல.

பலர் திரு.டாடாவின் செயல்களை விலங்குகள் மீதான அவரது அன்பைக் காட்டுவதாகக் கருதுகின்றனர்.

இந்தியாவில் உள்ள மற்றவர்கள் தங்கள் விருப்பப்படி செல்லப்பிராணிகளுக்காக
உயிலில் இடத்தை ஒதுக்குவதற்கு அவரது நடவடிக்கை வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த போக்கு தற்போது மும்பை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில் உள்ளது.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0