சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை அதன் முகநூல் பக்கத்தில் 40 வது தளத்தில் தொங்கும் மேடையில் சிக்கி இருந்தோரைக் காப்பாற்ற தகவல் கிடைத்ததாக பதிவைப் பதிவிட்டு இருந்தது.
இந்த சம்பவம் 168 Robinson ரோட்டில் கட்டத்தில் இரு ஊழியர்கள் சிக்கி உள்ளதாக தகவல் கிடைத்தது.
இரு ஊழியர்கள் Capital Tower கட்டடத்தின் 40 வது தளத்தில் தொங்கும் மேடையில் சிக்கி இருந்தனர்.அவர்களை குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் காப்பாற்றி உள்ளனர்.
Capital Tower 52 தளங்களைக் கொண்டது.அந்த அலுவலகத்தின் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.இச்சம்பவ இடத்திற்கு முதலில் மரினா பே தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குடிமைத் தற்காப்புப் படை தீயணைப்ப்பாளர்கள் சென்றனர்.
இவர்கள் தொங்கும் மேடையில் சிக்கியுள்ள இரு ஊழியர்களின் நிலையையும்,மேடையின் நிலைத்தன்மையையும் சோதிப்பதற்காக 41 வது தளத்திற்குச் சென்றனர்.
இதையடுத்து,சம்பவ இடத்திற்கு குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி,மீட்பு அணியும் விரைந்தனர்.
சிக்கி இருந்த இரு ஊழியர்களில் ஒருவரை அந்த அணியைச் சேர்ந்த நிபுணர் தொங்கும் மேடையில் இறங்கி அவரை 41 வது தளத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
அவருடன் இருந்த இன்னொரு ஊழியர் அங்கிருந்து நகர்வதற்கு சிரமம் அடைந்தார்.
அவரை 41 வது தளத்திற்கு படுக்கையின் மூலம் தூக்கி கொண்டு வரப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மீட்கப்பட்ட இரு ஊழியர்களும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.