பொது மக்களிடம் நூதன முறையில் மோசடி செய்த தாய்லாந்து பெண்!!

பொது மக்களிடம் நூதன முறையில் மோசடி செய்த தாய்லாந்து பெண்!!

தாய்லாந்து பெண் சிங்கப்பூரில் உள்ள பொது மக்களை ஏமாற்றிய குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.

அவர் மொத்தம் 32 மில்லியன் வெள்ளி பணத்தை மக்களிடம் ஏமாற்றியுள்ளார்.

ஆடம்பரப் பொருட்களை விற்பனைச் செய்வதாக கூறி மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு பொருளைத் தரவில்லை.

தாய்லாந்து நாட்டைச் சேந்த 24 வயதுடைய Pan-suk Siriwipa என்ற பெண் வர்த்தக மோசடி உட்பட மொத்தம் 180 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.தீர்ப்பு வழங்கப்படும் போது குடிநுழைவு சட்டத்தின்கீழ் அவர் மீது சுமத்தப்பட்ட 150 குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டது..

மேலும் 2022 – ஆம் ஆண்டில் அவரது சிங்கப்பூர் கணவர் பி ஜியா பெங்கின் மோசடி வெளி வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே அவர்கள் லாரியில் மலேசியாவுக்கு தப்பித்து சென்றனர்.

பின்னர் ஜோகூரில் உள்ள ஹோட்டலில் அதிகாரிகளிடம் சிக்கினர்.

பொது மக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பொருட்களை அவர்கள் விநியோகிக்கவில்லை.

இதன் தொடர்பாக காவல்துறையில் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனைவிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது கணவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0