சிங்கப்பூரில் பொதுச் சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் நோய் தொற்று ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பதற்காக அமைக்கப்படுகிறது.
இதற்காக சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும்.
நேற்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கோவிட்-19 வெள்ளை அறிக்கை தொடர்பான விவாதத்தை நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்தார்.
கிருமி தொற்று மிக வேகமாக பரவாமல் இருப்பதற்கு அதனைத் தடுப்பதற்கும் சிங்கப்பூர் மேலும் தயாராக இருப்பது முக்கியம் என்று கூறினார்.
சிங்கப்பூரில் சுகாதார அமைச்சகம், தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையம் ஆகிய பல்வேறு இடங்களில் ஆற்றலாக பரவி இருக்கிறது. இவற்றை ஒன்றிணைப்பது அவசியம் என்று சுட்டினார்.
அதோடு வேறு சில நாடுகளில் நோய் தொற்று கட்டுப்பாடு நிலையங்கள் இருக்கிறது. அதேபோன்று சிங்கப்பூரிலும் நிலையங்கள் தேவை என்று கூறினார்.
சிங்கப்பூர் இந்த மூன்று ஆண்டு கிருமி பரவல் காலகட்டத்தில் கற்றுக்கொண்ட பாடத்தை வைத்து எதிர்காலத்துக்கு தயாராக வேண்டும் என்று கூறினார்.